
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் நம்மை பல வியப்படையை செய்வதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பர்கர் வீட்டை உருவாக்கி காட்சி விருந்தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது instagram பக்கத்தில் ஒரு பயனர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வீடு பார்ப்பதற்கு உண்மையாகவே ஒரு பர்கர் போன்று இருக்கிறது. அதற்குள் சென்று பார்த்தால் ஹால், கிச்சன், கழிவறை மற்றும் குளியலறை என அனைத்துமே பர்கர் வடிவில் செய்யப்பட்டுள்ளது.
அதோடு அந்த வீட்டில் உள்ள சோபா, மேஜை மற்றும் தூண்கள் போன்றவைகளும் பர்கர் வடிவில் அற்புதமாக இருக்கிறது. அதோடு கழிவறையில் உள்ள குளியலறை தொட்டியில் மஞ்சள் நிறத்தில் திரவ நீர் இருக்கிறது. இது பர்கர் சீஸ் என்று கூறப்படுகிறது. இதேபோன்று நீச்சல் குளத்தில் உள்ள நீரும் பர்கர் சீசால் நிரம்பியுள்ளது. இந்த வீட்டினை அற்புதமாக செயற்கை தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்துள்ளனர். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் லைக்ஸ் களை குவித்து வருவதோடு அதனை உருவாக்கியவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram