ஜப்பானில் ஒசாகாவை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம் வித்தியாசமான முறையில் தனது ஊழியர்களை ஈர்த்துள்ளது. என்னவென்றால் பல முன்னணி நிறுவனங்களை போல அதிக ஊதியம் கொடுக்க முடியாததால் வேலை நேரத்தில் ஊழியர்களுக்கு மதுபானமும், அதிக நாட்கள் விடுமுறைகளும் கொடுத்து புதுவித முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களுக்கு வித்தியாசமான வேலை சூழலை கொடுக்க வேண்டும் என்பதால் ஊதியத்தை விட அவர்களுக்கு மிகவும் பிடித்த மதுபானத்தை வழங்குவதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.