தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று சட்டசபை கூட்டத்தின் போது புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான் காரணம் எனவும் கண்டிப்பாக அவர் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கூறினார். அதாவது போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும் அதனை மீறி அல்லு அர்ஜுன் படம் பார்த்ததாகவும் ரோடு சோ நடத்தியதாகவும் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பது எனக்கு புரியவில்லை எனவும் கூறினார். அதன் பிறகு தாயை இழந்து ஹோமாவில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சிறுவனை சென்று பிரபலங்கள் பார்க்காத நிலையில் திரையிலிருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுன் வீட்டிற்கு திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் சென்றனர்.

இனி நான் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக இருக்கும் வரை படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றார். இந்நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா முதல்வரின் பேச்சுக்கள் தன்னை காயப்படுத்தியதாக கூறியுள்ளார். அதாவது 22 வருடங்களாக நான் உழைத்த சம்பாதித்த நற்பெயரும் மரியாதையும் ஒரே இரவில் உடைந்து விட்டது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார். அதன்பிறகு தெலுங்கானா முதல்வரின் பேச்சுக்கள் எனக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ரோடு ஷோ நடத்தினார் என்று கூறுவது சரியல்ல. அதேசமயம் அனுமதி வழங்காமல் படம் பார்க்க சென்றதாக கூறப்படுவதும் பொய்யான குற்றச்சாட்டு. மேலும் நான் அரசுடன் எந்தவிதமான சர்ச்சைகளையும் மேற்கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.