தமிழ், தெலுங்கு, மலையாளம் படம் உலகில் முன்னணி ஹீரோயினியாக வலம் வரக்கூடிய கீர்த்தி சுரேஷை சிலருடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் தொழிலதிபர் பர்ஹான் என்பவரும் கீர்த்தி சுரேஷும் ஒரே மாதிரி நிறம் மற்றும் டிசைனில் உடையணிந்து போட்டோ எடுத்து வெளியிட்டனர்.

அதன்பின் பர்ஹானை கீர்த்தி சுரேஷ் காதல் செய்வதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. அதற்கு கீர்த்தி சுரேஷின் தந்தை மற்றும் சினிமா தயாரிப்பாளரான சுரேஷ் குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதாவது “கீர்த்தி சுரேஷிம் பர்ஹானும் நண்பர்கள் ஆவர். எங்களது குடும்பத்தில் ஒருவராகவே பர்ஹான் உள்ளார். நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது எங்களோடு பலமுறை வந்திருக்கிறார். இது போன்ற தவறான தகவலை பரப்புவது எங்களது குடும்பம் மட்டுமன்றி அவரது குடும்பத்தையும் பாதிக்க செய்யும். என் நண்பர்கள் விளக்கமளிக்கும்படி வற்புறுத்தியதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இது போன்ற ஆதாரமில்லாத தகவல்களை தயவுசெய்து வெளியிட வேண்டாம்” என சுரேஷ்குமார் கூறியுள்ளார்.