இந்திய ரயில் பயணத்தின்போது ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தோர்-டெல்லி பயணிக்கும் ஏ.சி. பெட்டி ஒன்றில் நிகழ்ந்துள்ளது. தனது குழந்தையுடன் பயணித்த அப்பெண்ணின் பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அவர் ரயில்வே பாதுகாப்புப் படையினரையும் (RPF), மற்ற ரயில்வே ஊழியர்களையும் பலமுறை தொடர்பு கொண்டும், உதவி கிடைக்காததால் கடும் கோபமடைந்துள்ளார்.

ஆத்திரம் தாங்காமல், அப்பெண் தான் பயணித்த பெட்டியின் கண்ணாடி ஜன்னலைத் (window pane) தட்டி உடைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மற்ற பயணிகள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தும், அவர் தனது கோபத்தைத் தொடர்ந்ததால், கண்ணாடி துண்டுகள் பெட்டிக்குள் சிதறியதுடன், அருகில் இருந்த குழந்தையும் பதற்றமடைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக ரயில்வே அதிகாரிகள் தற்போது இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திருட்டு, பாதிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக அதிகாரிகள் பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வு நேரடியாக உணர்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Info Bazzar Net (@infobazzarnet)