
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் தன் கணவன் இளம் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் தன் கணவன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இளம் பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று அந்தப் பெண்ணை தெருவில் இழுத்துப் போட்டு அடித்து தாக்குகிறார். அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்து தாக்கும் நிலையில் அங்கிருந்தவர்கள் அதனை வேடிக்கை பார்த்தனர்.
@muzafarnagarpol – कृपया जांच कर आवश्यक कार्यवाही करें। @wpl1090
— UP POLICE (@Uppolice) May 4, 2025
இருப்பினும் சிலர் அதனை தடுக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இது பற்றி காவல்துறையினர் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.