உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு பெண்மணி காவல் நிலையத்திற்கு முன்பாக சாலையில் அமர்ந்து கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாக அந்த பெண்மணி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார்.
ஆனால் அவர்கள் அந்த பெண்ணின் புகாரை வாங்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் திடீரென சாலையில் அமர்ந்து கதறி அழ ஆரம்பித்ததோடு தன்னுடைய பிரச்சனையை போலீசார் கேட்க மறுப்பதாக கூறினார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதோடு அந்த பெண்ணுக்கு போலீசார் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
View this post on Instagram
