பொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியைத் துன்புறுத்துவதாகப் புகார்கள் வரும். ஆனால், பெங்களூருவில் ஒரு கணவர் தனது மனைவி மீது கொடுத்துள்ள புகார், போலீசாரையே அதிர வைத்துள்ளது. நாகர்பாவியைச் சேர்ந்த 37 வயது நபர், தனது மனைவி ஷில்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஷில்பா, தனது கணவரைத் தொடர்ச்சியாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் தனது கணவருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, “அதில் இருப்பது போலவே என்னுடன் நீ நடந்து கொள்ள வேண்டும்” என்று கட்டாயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், தனது தோழியுடனும் நெருக்கமாக இருக்கச் சொல்லி அந்த நபர் வற்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆபாசச் சாட்டிங் மற்றும் வீடியோக்கள் மூலம் அவருக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். மேலும், குடும்பத்தினரின் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் தராமல் இழுத்தடிப்பு செய்து வரும் ஷில்பா மீது போலீசார் தற்போது எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
