சின்னத்திரை நடிகை ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ராஜா ராணி “என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து தொடர்களில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து “ராஜா ராணி “சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா மானசா கூறியதாவது,  மதுரைக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ள மக்கள் மிகவும் அன்பான முறையிலும் உரிமையுடனும் நடந்து கொள்வார்கள். அந்த அன்புக்கு நான் என்றும் அடிமை என்றார். இதனை அடுத்து தொடர்களில் நடித்து வருவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

இதனை அடுத்து நடிகர் விஜய் கட்சி தொடங்கியது, குறித்து பத்திரிக்கையாளர்கள் ஆலியா மானசாவிடம் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்த ஆல்யா மானசா, எனது ஓட்டு விஜய்க்கு தான் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவீர்களா என கேட்டனர். அதற்கு தனது குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வே நேரம் சரியாக உள்ளது. பிரச்சாரத்திற்கு நேரம் கிடையாது. ஆனால் கண்டிப்பாக விஜய்க்கு தான் வாக்களிப்பேன் என கூறினார்.