ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியின் பாஜக எம்பி கங்கனா ராணாவத். இவர் சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்ற போது பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் தனிநாடு போரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று கங்கனா கூறியதால் தான் அடித்ததாக பெண் காவலர் கூறியிருந்தார். அதாவது டெல்லியில் போராடிய விவசாயிகளில் தன்னுடைய தாயும் ஒருவர். தன் தாயை அவர் அவதூறாக பேசிய காரணத்திற்காகத்தான் கோபத்தில் கன்னத்தில் அறைந்ததாக அந்த காவலர் கூறியிருந்தார்.

இவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில் வேலையை இழந்த அதிகாரி குல்வீந்தர் கவுர் தற்போது தன்னுடைய x பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய அம்மாவின் மரியாதைக்காக நான் ஆயிரம் வேலைகளையும் இழக்க தயாராக இருக்கிறேன். இந்த வேலையை இழந்ததை நினைத்து நான் பயப்பட போவதில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் குல்வீந்தர் கவுருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.