நடிகர்  ரஜினிகாந்த்  சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள “லால் சலாம்” படம் இன்று வெளியாகியுள்ளது. இதனிடையே, படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து  ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.  ரஜினிகாந்த்  இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்துக்கு இந்த படம் மிகப்பெரிய ஓபனிங்னாக அமைந்துள்ளது.