
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமீரா பானு ஷேக் (71) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேஷ்மா முஃபரி காசி (41) என்ற மகள் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் தன்னுடைய வயதான தாயை மகள் சமையலறையில் உள்ள கத்தியை எடுத்து குத்தி கொலை செய்தார்.
அந்தப் பெண் தன்னுடைய தாயை வயிறு, மார்பு மற்றும் கழுத்து உட்பட பல பகுதிகளில் கொடூரமாக பலமுறை குத்தினார். அதன் பிறகு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தானாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் சரணடைந்துவிட்டார். அதாவது தன்னுடைய தாயார் மூத்த சகோதரி மீது அதிக பாசம் செலுத்துவதாக கருதி இப்படி கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.