கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன் இறப்புக்கு பின் இதேபோன்று எனது உருவ சிலையை செய்ய வேண்டும் என கணவரிடம் தெரிவித்திருந்தார். சென்ற 2021ம் வருடம் இந்திராணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அதன்பின் மனைவியின் ஆசையை நிறைவேற்ற தாபஸ் அவரது சிலிக்கான் சிலையை செய்வதற்காக ஆன்லைனில் பல சிற்பிகளை தேடி பார்த்தார்.

அதனை தொடர்ந்து சுபிமல் தாஸ் என்ற சிற்பி சிலிக்கான் சிலையை செய்ய ஒப்புக் கொண்டார். அதன்படிரூபாய்.2.50 லட்சம் செலவில் 30 கிலோ எடை கொண்ட இந்திராணியின் சிலை உருவாக்கப்பட்டது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட இந்திராணியின் சிலை தாபஸ் வீட்டு வராண்டாவில் சோபாவில் உட்கார்ந்து உள்ளதுபோல் நிறுவியுள்ளார். இதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுபற்றி தாபஸ் கூறியதாவது “இந்த சிலை எனது மனைவி தன்னுடன் எப்போதும் இருக்கிறாள் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.