தேசிய ஓய்வூதிய அமைப்பு சந்தாதாரர்கள் விரைவில் நிதியை திரும்ப பெறுவதற்குரிய திட்டத்தை வெளியிட உள்ளதாக PFRDA தலைவர் தீபக் மொஹந்தி அறிவித்து உள்ளார். அதன்படி, சந்தாதாரர்கள் நிதியை திரும்ப பெறுவதற்கான சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளானை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. அதோடு இந்த காலாண்டின் இறுதிக்குள் புது திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளதாகவும் தீபக் மொஹந்தி அறிவித்து உள்ளார்.

இதன் வாயிலாக தேசிய ஓய்வூதிய அமைப்புக்கான தொகையை முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள இயலும். தற்போதுள்ள திட்டத்தின் வாயிலாக 60 வயது எட்டிய சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டு பணத்திலிருந்து குறிப்பிடத் தொகையை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

எனினும் இப்போது ஓய்வு பெற்றதில் இருந்து 75 வயது வரை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடந்தோறும் என்ற விருப்பத்தின் படி முதலீடு செய்த பணத்தில் இருந்து தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டத்தின் வாயிலாக தேசிய ஓய்வூதிய திட்டத்தின் சகாதாரர்களுக்கு ஒரு பிரத்தியேக வரி சலுகையும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் குறைந்தது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாதம் ரூ.10000 முதலீடு செய்தால் ஓய்வு அடைந்த பிறகு மாதம் 45,587 ரூபாய் பென்ஷன் தொகையாக பெற இயலும்.