இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் அகவிலைபடியை உயர்த்தி உள்ளது. இப்போது உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது.

அதாவது, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 16% அகவிலைப்படி தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மொத்த அகவிலைப்படி 412% ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் 16% அகவிலைப்படி 2023 ஜனவரி முதல் தேதியிட்டு கணக்கிடப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.