உலகில் வினோத பழக்கம் கொண்ட மனிதர்களுக்குப் பஞ்சமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரின் வாழ்க்கை முறை இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் ‘மில்க் லவ்’ (Milk Luv) என்று அழைக்கப்படும் இந்த இளம்பெண், தன்னை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ‘பொமரேனியன்’ வகை நாயாகவே கருதி வாழ்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Milk 🐾🦴 (@milkluv_3)

சிறுவயதிலிருந்தே நாய்கள் மீது இருந்த அதீத பாசமும், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் பார்த்த சில வீடியோக்களுமே அவரை இந்த வினோத பாதைக்குத் தள்ளியுள்ளது.

இப்போது அவர் மைதானத்தில் பந்தின் பின்னால் ஓடுவது, நாக்கை வெளியே தொங்கப்போட்டு விளையாடுவது என அச்சு அசல் நாய் போலவே நடந்துகொள்கிறார். இதற்குப் பரிசாக அவரது நண்பர்கள் அவருக்கு ‘டாக் ட்ரீட்’ (Dog Treats) வழங்குகின்றனர்.