பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரை தலைமையிடமாக கொண்டு நிதி நடவடிக்கை பணிக்குழு என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் நோக்கம் சட்ட விரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வணங்குவதை தடுத்தல் போன்றவை ஆகும். இந்த பணிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் சட்ட விரோத பணப்புழக்கத்தையும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதும் கண்டறியப்பட்டால் அந்த நாடு உடனடியாக கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கபடும்.

இதனை அடுத்து கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அந்த நாடு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெற முடியாது எனவும் பன்னாட்டு வணிகம் செய்வதற்கு தடைகள் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி நடவடிக்கை பணி குழுவில் உறுப்பினராக உள்ள ரஷ்யா உக்ரைன…