
ரயில் செல்லும் போது பிற வாகனங்கள் செல்வதை தடுக்கும் பொருட்டு கேட் போடப்படும். சிலர் கேட் போடுவதற்கு முன்பாக வேகமாக சென்று விடலாம் என நினைத்து ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஹெல்மெட் அணிந்த படி பைக்கில் சென்ற ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கிறார்.
அவர் ரயில்வே கேட்டை இடது கையால் தூக்கி கொண்டு வாகனத்தை இயக்கி செல்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கேட் அந்த பெண்ணின் தலையில் விழுந்ததால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இந்த வீடியோ 1.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram