தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். சிறு வயது முதலே நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். ஏராளமான படங்களில் நடித்து பல விருதுகளை குவித்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியினையும் தொடங்கிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது இனி தன்னை யாரும் உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம் அடைமொழி இல்லாமல் பெயரை மட்டும் வைத்து அழைத்தால் போதும் என்று கூறியுள்ளார்.

அதாவது கமல்ஹாசன், கமல் அல்லது KH என்று அழைக்குமாறு கூறியவர் தன் பட்டத்தை யாருடைய மனதும் புண்படாதவாறு திறப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் முன்னதாக நடிகர் அஜித்குமார் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் அஜித் அல்லது ‌AK என்று மட்டும் அழைத்தால் போதும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.