மயிலாடுதுறை மாவட்டம் வேலம்புக்கு குடியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு அருண்குமார் என்பவர் அறிமுகமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமார் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறி விக்னேஷை ஏமாற்றியுள்ளார்.

அவரது ஆசை வார்த்தைகளை நம்பிய விக்னேஷ் அருண்குமாரிடம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அருண்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விக்னேஷ் மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அருண்குமார் துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.