
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் போது அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு திமுக ஆட்சி முடிவடைய இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்குள் நீங்கள் எப்படி ராமேஸ்வரத்தில் விமான நிலையம் கட்டுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா பல நூறு ஆண்டுகளுக்கு திராவிட மாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும். தற்போது கோவை ஏர்போர்ட் விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு விமான நிலையம் கட்டுவது என்ன ஜீபூம்பா வேலையா. உரிய நேரத்தில் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கப்படும் என்றார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மற்றும் மதுரை ஏர்போர்ட் பணிகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டவை என்றார்.
இதற்கு அமைச்சர் டி ஆர் பி ராஜா பதில் அளித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் தவறான பதிலை கூறுகிறார் என்னுடைய மானிய கோரிக்கை விவாதத்தின் போது இதற்கான பதிலை நான் சொல்கிறேன் என்றார். அதன் பிறகு தண்ணீரில் தெர்மாகோல் விடுவது ஈசி ஆனால் ஏர்போர்ட் அமைப்பது அப்படி கிடையாது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆராய வேண்டி உள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றார். அப்போது குறிகிட்ட செல்லூர் ராஜு தெர்மாகோல் தெர்மாகோல் என்று சொல்லி இப்படி ஓட்டுகிறீர்களே. அதிகாரிகள் சொல்லி தானே நாங்கள் அங்கு போனோம். சரி பரவாயில்லை ராஜா வாழ்க என்று நகைச்சுவையாக கூறினார்.