டெல்லியில் வசித்து வரும் ஒரு இளம் பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 14ஆம் தேதி ஒரு ‌ ஹோட்டலுக்கு சென்ற நிலையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு  ஏற்பட்டதால் அந்த பெண் காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு ஒரு வாலிபர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று கூறினார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்தனர். அந்த சமயத்தில் இளம்பெண் மது போதையில் இருந்த நிலையில் காவல்துறையினரிடம் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இடைத்தொடர்ந்து வாலிபரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது இருவரிடமும் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம் பெண் விருப்பத்தின் பெயரில்தான் இருவரும் உறவில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் போலியாக புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதனால் நீதிமன்றம் அந்த வாலிபரை ஜாமினில் விடுதலை செய்தது. மேலும் போலியாக புகார் கொடுத்த அந்த பெண்ணை கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. அதோடு பெண்களை பாதுகாக்க பல சிறப்பு சட்டங்கள் அமலில் இருக்கும் நிலையில் அதனை பெண்கள் தங்களுடைய உள்நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.