தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று தென் சென்னை பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றுக்கு சாமி கும்பிடச் சென்ற அவர், வெளியில் வந்து பெண்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பேசிய அவர், “நான் சொன்ன வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அப்படி செய்யவில்லை என்றால் என்னை கல்லை எடுத்துக் கூட அடியுங்கள்” என பேசினார். அவரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.