
மதுரை மாவட்டம் அனுப்பானடி தாய்நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜீவகுமாரி(38). இந்த தம்பதியினருக்கு இன்ப லட்சுமி(13) என்ற மகளும், பெருமாள்(10) என்ற மகனும் இருந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் உயிரிழந்ததால் ஜீவகுமாரி வேலைக்கு சென்று தனது பிள்ளைகளை பராமரித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப செலவுக்கு போதுமான வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த ஜீவகுமாரி தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு அவரும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து டாக்டர்கள் ஜீவகுமாரியும், இன்ப லட்சுமியும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெருமாளுக்கு தீவிர சிகிச்சளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.