
இன்றைய காலகட்டத்தில் தம்பதிகள் ஒரு சிறிய பிரச்சனைக்காக விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள். சமீபத்தில் கூட கணவன் பொட்டு வாங்கி தராததால் ஒரு மனைவி விவாகரத்து நோட்டீஸ் வழங்கிய சம்பவம் அரங்கேறியது. இதைத்தொடர்ந்து தற்போது செருப்புக்காக மனைவி கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆக்ராவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மனைவி தன் கணவரிடம் ஆசையாக ஹீல்ஸ் செருப்பு கேட்டுள்ளார். அந்த செருப்பை போட்டு நடந்த போது அவருடைய மனைவி கீழே விழுந்து விட்டார். இதன் காரணமாக அந்த கணவர் தன் மனைவியிடம் ஹீல்ஸ் செருப்பு போடக்கூடாது என்று கண்டிஷனாக கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு தற்போது மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்று விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.