ஹிமாசல் பிரதேச மாநிலத்தின் சிர்மோர் மாவட்டத்தில் உள்ள குன்ஹாட் என்ற கிராமத்தில், நடந்த திருமணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 12 முதல் 14ம் தேதி வரை நடைபெற்ற இந்த திருமணத்தில், திந்தோ குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை  திருமணம் செய்துள்ளனர்.

இது ஹட்டி சமூகத்தில் “உஜ்லா பக்ஷ்” என அழைக்கப்படும் பாரம்பரிய நடைமுறை. இந்த பழம்பெரும் வழக்கம், நிலம் பிளவுபடாமல் காப்பதற்காகவும், குடும்பத்தின் பொருளாதார ஒற்றுமையை நிலைநாட்டவும் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by ABP News (@abpnewstv)

மூத்த சகோதரர் ஹிமாசல் மாநில ஜல் சக்தி துறையில் பணியாற்றி வருகிறார். இளைய சகோதரர் வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர்களது வருங்காலத்தை பகிர்ந்து கொள்ள மணமகள் தயாராக இருந்தார்.

மூவரும் இந்த திருமணத்தை பரஸ்பர புரிதலோடும், குடும்ப ஒற்றுமையை பேணும் நோக்கத்துடனும் செய்துள்ளதாக கூறியுள்ளனர். கிராம மக்கள் இந்த திருமணத்தை உற்சாகத்துடன் கொண்டாடியதோடு, இது கலாசாரத்தை மீண்டும் நினைவூட்டும் விழா என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இதை பலர் பாராட்டுகின்றனர்; இது சர்ச்சைக்குரியது அல்ல, மாறாக, பண்டைய சமூகத்தின் கலாசார விழிப்புணர்வை மீண்டும் எடுத்துக்காட்டும் முக்கியமான நிகழ்வாக இருக்கிறது என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.