தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், நடிகர் விஜய் குறித்து திருச்சி சூர்யா அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில், விஜய் மாலை 6 மணிக்கு மேல் வெளியில் வருவதில்லை என்றும், கட்சி கூட்டங்கள் அல்லது பூத் கமிட்டி நிகழ்வுகளுக்கு கூட இரவு நேரத்தில் பங்கேற்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சினிமா துறையில் இது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றும், அரசியல் தலைவராக இரவு நேர கட்சி கூட்டங்களுக்கு விஜய் வருவது சாத்தியமில்லை என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். இந்த கருத்து, விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது. மற்ற கட்சிகள் மாலை நேரத்தில் மாநாடுகளை நடத்தும் போது, தமிழக வெற்றிக் கழகம் பகல் நேரத்தில் மாநாடு நடத்துவதற்கு காரணம், விஜய்யின் மாலை நேர பழக்கங்கள் தான் என சூர்யா மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
மாலை 6 மணிக்கு மேல் விஜய் குடிக்காமல் இருக்க முடியாது என்றும், இதனால் அவர் வெளியில் வருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இப்படி ஒரு நபரிடம் ஆட்சியை ஒப்படைப்பது எப்படி சாத்தியம் என சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பேட்டி, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்து பலரிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.
உண்மை தான் போல pic.twitter.com/aDgehuFUix https://t.co/XIwDKEmron
— BK (@esalacupnamdhu) August 21, 2025
