பொதுவாகவே எந்த ஒரு கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் அங்கு பெண்கள் மற்றும் ஆண்கள் சமமான விகிதத்தில் தான் இருப்பார்கள். ஆனால் ஒரு கிராமத்தில் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் இருக்கின்றன. அதாவது கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உமோஜா என்ற ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழக்கூடிய பெண்கள் அனைவரும் மாசாய் என்ற சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சம்பூர் என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்.

இந்த கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவான நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் சம்பூர் இனத்தை சேர்ந்த பெண்களை பிரிட்டன் ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. இதனால் அந்தப் பெண்களின் கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த ஒரு பெண் தன்னுடன் சேர்ந்து 15 பெண்களுடன் சேர்த்து உமோஜா என்ற கிராமத்தை உருவாக்கியுள்ளார். தற்போது இந்த குடும்பத்தில் 40 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் மணிமாலைகளை விற்று வருமானம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.