அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கட்டு வெந்தயக் கீரை சுமார் 600 ரூபாய்க்கு ($7) விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்தியப் பெண் ஒருவர், அதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வெறும் 10 முதல் 20 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய கீரை, அமெரிக்காவில் இவ்வளவு விலையா என அவர் வியப்புடன் கேட்டது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் குறைந்த செலவிலான வாழ்க்கை முறையையும், அங்கு கிடைக்கும் மலிவான மற்றும் பசுமையான காய்கறிகளையும் பாராட்டி இந்தியர்கள் பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
அதேவேளையில், இந்த விலையேற்றத்திற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். அமெரிக்காவில் வருமானம் டாலரில் இருப்பதாலும், காய்கறிகளைப் பதப்படுத்துவதற்கும் கொண்டு செல்வதற்கும் அதிக செலவு ஆவதாலும் இந்த விலை வித்தியாசம் ஏற்படுவது சகஜம் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Methi for Rs 10 is the cope Indians feed themselves to avoid confronting reality.
A 2BHK in Andheri costs Rs 1.8 crore for 600 sqft of carpet with crumbling walls and no parking. Same money gets you a proper house in mid-sized US cities. iPhone 17 Pro costs Rs 1.35 lakh here vs… https://t.co/YN5wYWBwFl
— Frontier Indica (@frontierindica) April 6, 2026
“>
அமெரிக்க வசதிகளையும் இந்தியாவின் மலிவான வாழ்க்கைச் சூழலையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் இப்போது ஒரு பெரிய ‘விலைப் போரே’ நடந்து வருகிறது.
