
ஜப்பானின் ஓகயாமாவை சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான புதிய ரக வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கீ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வாழைப்பழங்கள், மிகவும் சுவையாக இருப்பதுடன் அதன் தோலையும் சாப்பிட முடியும். அன்னாசி பழத்தின் சுவையை நினைவூட்டும் இந்த வாழை இந்திய மதிப்பில் 362 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மிக குளிர்ந்த பிரதேசங்களில் விளைவதால் இந்த பழங்களுக்கு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுவதில்லை.