படத்தின் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி வேடத்தில் பர்ஹானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ட்ரீம் வாரியார் புரொடக்ஷன் படத்தை தயாரிக்கின்றது. இந்த  திரைப்படம் மே 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

. இந்நிலையில், ஃபர்ஹானா படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “விருது விழாவிற்கு எனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. எனக்கு விருதும் கிடைக்கவில்லை” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து நாயகியை மையமாக கொண்ட கதைகளில் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.