கேரளாவை குறித்த கதையை கேரள டைரக்டர்கள் யாருமே இயக்காத நிலையில், பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் எந்தவொரு பீல்டு அறிவும் இன்றி வெறும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு வேறு சில ஆதாயங்களுக்காக இயக்கி உள்ளார் என்பது படத்தை பார்த்தாலே தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தற்போது தி கேரளா ஸ்டோரி கதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஷாலினியாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகை அதா ஷர்மா சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதியாக மாறிய சூழலில், பின் அவர் பிடிபடும் நிலையில் அவரது முன் வரலாறு படமாக விரிகிறது.

ஷாலினி எனும் அய்யர் வீட்டு பெண்ணாக கேரளாவில் உள்ள அதா ஷர்மா நர்சிங் படிப்பதற்காக காசர்கோடிலுள்ள ஹாஸ்டலில் தங்குகிறார். அவருடன்  ஹீரோயினி சித்தி இத்னானி, ஒரு கிறிஸ்துவ பொண்ணு, ஒரு முஸ்லிம் பொண்ணு தங்குகிறார்கள். அந்த இஸ்லாமிய பெண் ஐஎஸ் தீவிரவாதியின் ஆள் என்ற நிலையில், இந்த 3 பெண்களையும் பிரைன் வாஷ் செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றுகிறார். அதாவது, பர்தா அணிந்தால் பாலியல் பலாத்காரமே நடக்காது எனவும் அல்லா தான் ஆகச்சிறந்த கடவுள் எனவும் கூறி கூறியே அந்த பெண்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்கிறார். அதோடு இஸ்லாமிய இளைஞர்களை வைத்துக்கொண்டு அந்த பெண்களை காதலிக்க வைத்து கர்ப்பம் ஆக்கி விடுகின்றனர்.

அதா ஷர்மா தன் கணவருடன் சிரியா போகும்போது தான் ஐஎஸ் தீவிரவாதியாக மாற்றவே இப்படியொரு சூழ்ச்சியை இஸ்லாமியர்கள் செய்து உள்ளனர். மேலும் இந்து பெண்களை அங்கே கொண்டு வந்து தீவிரவாதிகளாகவும் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் மாற்றுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளும் அதா ஷர்மா அந்த நரகத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். கடைசியில் அவர் தப்பித்தாரா..? இல்லையா..? என்பது தான் இந்த தி கேரளா ஸ்டோரி படத்தின் கதைக்களம் ஆகும்.