தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் நிலையில் சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது. இவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து விஜயை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உதயநிதியை மக்களை காக்க வந்த மாமன்னன் என்று புகழ்ந்ததோடு விஜயை போலி அரசியல்வாதி என்று கூறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் விஜயை மறைமுகமாக சீண்டி ஒரு எக்ஸ் தள பதிவை போட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு விஜய் பிடிக்குமா இல்லையெனில் அஜித்தை பிடிக்குமா? என சிலர் கேட்கிறார்கள். எனக்கு அஜித்தை தான் எப்போதும் பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகராக இருப்பதோடு முக்கியமாக பெண்களையும் மதிக்கிறார். அவர் தன் வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தும் நிலையில் அவரது ரசிகர்களும் அதனையே பின்பற்றி போற்றுகிறார்கள். அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஒருபோதும் பெண்களை விமர்சிப்பது கிடையாது. அவர்கள் கோழைகள் அல்ல. கண்ணியத்துடனும் தரத்துடனும் நடந்து கொள்கிறார்கள்.

 

அஜித் ஒருபோதும் ஆன்லைன் மூலமாக தன்னுடைய ரசிகர்கள் பெண்களை அவமதிக்க விடமாட்டார். அவர் அமைதியாக பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தடுப்பவர் மற்றும் அமைதியாக இருக்கும் எந்த ஒரு நபரும் உண்மையான தலைவர் என்று அழைக்க தகுதியுடையவர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் அவரது ரசிகர்களை திவ்யா சத்யராஜ் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.