தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் கோபி நயினார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலின் போது திமுக கட்சியில் செயல்படும் மதிவதினி போன்றவர்கள் மக்கள் பிரச்சனைக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை என்று விமர்சித்திருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் திமுகவுக்கு ஆதரவாகவும் கோபி நயினருக்கு எதிராகவும் விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் அறம் திரைப்படத்தை இயக்கியதற்காக திராவிடர் கழகம் வழங்கிய பெரியார் விருதுநகர் திருப்பி கொடுப்பதாக தற்போது கோபி நயினார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் தலித் மக்களுக்கான குடிமனை கேட்டும் அவர்கள் வாழும் நிலங்களில் மண் அள்ளுவதையும் தட்டி கேட்டதற்காக பெரியார் அமைப்பினரால் நான் மிகவும் கேவலமாக விமர்சிக்கப்படுகிறேன்.

தங்களை ஒரு ஜனநாயக அமைப்பு என்று அவர்கள் கூறிக் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு எதிராக கேள்வி கேட்டால் அவர்கள் என்னை சர்வாதிகார மனநிலையோடு எதிர்கொள்வதால் எனக்கு இந்த சமூகத்தில் வாழவே அச்சமாக இருக்கிறது. தமிழகத்தில் ஒரு தலித் ஜனநாயக சிந்தனையோடு கேள்வி எழுப்பினால் அதனை பெரியார் அமைப்பினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாடு முழுவதும் அறிவு ஜீவிகளின் சமூக செயற்பாட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடக்கும் படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழப்போகும் படுகொலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மேலும் இது போன்ற பல்வேறு காரணங்களால் எனக்கு பெரியார் அமைப்பினர் கொடுத்த விருதுநகர் திருப்பி அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.