ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாசெர்லா பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அரசு பெண் ஊழியர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல வந்த மர்ம நபர், திடீரென வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரைச் சீரழித்துள்ளார்.

அந்தப் பெண் தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாகக் கூறி தப்பிக்க முயன்றபோது, ஆத்திரமடைந்த அந்த நபர் இரும்பு கம்பியால் அவரது அந்தரங்க உறுப்பில் பலத்த காயத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அராஜகச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.