மனிதர்கள் சாப்பிடும் உணவுகளை குரங்குகள் பார்த்தவுடன் அதற்கே ஆசை கொள்வது சாதாரண விஷயம். ஆனால், இப்போது ஒரு குரங்கு, பிஸ்கட்டை வாங்க சிறுமியின் வாய் வரை சென்று பிடிக்க முயன்ற காட்சி, சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை அதிர்ச்சி, சிரிப்பு இரண்டையும் தரும் வகையில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு சிறுமி குரங்குகளுக்கு பயந்து ஜன்னல் கிரில்லில் ஏறியபடி பிஸ்கட் சாப்பிடுகிறாள். கீழே இருந்த குரங்கு ஒன்று, தரையில் விழுந்திருந்த பிஸ்கட்டை எடுத்து சாப்பிடுகிறது. இதைப் பார்த்த மற்றொரு குரங்கு, “எனக்கும் வேணும்” என்ற ஆர்வத்தில், ஜன்னலுக்கே ஏறி சிறுமியின் வாயிலிருந்தே பிஸ்கட்டை பறித்தது. இந்த காட்சி குரங்குகளின் ஆசை எவ்வளவு கடுமையானது என்பதையும், சிறுமியின் பயத்தைப் பார்க்கும் போது இது ஒருவிதமான நகைச்சுவையை ஏற்படுத்துகிறது.

இந்த வீடியோ, @shivaprabhapatil என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்போது வரை 55, 000-க்கும் மேற்பட்ட லைக்குகள், பலரது கமெண்ட்களுடன் வைரலாகி வருகிறது. மேலும் இதோ அந்த வீடியோ,