பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி எக்ஸ்சேஞ்ச், கார்ப்பரேட் மற்றும் பண்டிகை கால சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி ஏத்தர் 450X (2.9 கிலோ வாட் ஹவர், 3.7 கிலோ வாட் ஹவர்) மற்றும் ஏத்தர் 450S (2.9 கிலோ வாட் ஹவர் மாடல்களை வாங்கும் போது எக்சேஞ்ச் முறையில் வாடிக்கையாளர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இருப்பினும் அந்த தொகை வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் பெட்ரோல் இருசக்கர வாகனத்தின் நிலை, வயது வாங்கும் போது அதன் உண்மையான விலை ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனையடுத்து ஏத்தர் 450S ப்ரோ வெர்ஷனுக்கு ஐந்தாயிரமும், கார்ப்பரேட் பலனாக 1500 ரூபாயும் வழங்கப்படுகிறது, இதேபோன்று ஏத்தர் 450X மாடலுக்கு கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 24 மாதங்களுக்கு மாதத் தவணையை பயன்படுத்தும் போது 5.99% வட்டி வசூலிக்கப்படுவதோடு இந்த சலுகைகள் நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய சலுகைகளின் கீழ் எக்ஸ்சேஞ்ச் முறையில் முழுமையான தள்ளுபடி பெறும்போது ஏத்தர் 450S விலை 86 ஆயிரத்திற்கும், 450X விலை 1 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.