நாட்டின் ஏழு விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்க எத்தனை லாரிக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டதாக மோடி குற்றம் சாட்டிய நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு சென்ற ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எத்தனை லாரிகளில் பணத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டின் பிரதான ஏழு விமான நிலையங்களை பிரதமர் மோடி அதானி தாரை வார்த்தார் என்பது குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.