
டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த சில தினங்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் பல பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் கடந்த 11 நாட்களில் இது ஆறாவது முறையாகும். வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட பள்ளிகளில் எல்லாம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
போலியான மிரட்டல் போன்றே இருந்தாலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளுக்கு இமெயில் அனுப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.