காடு வழியாக செல்லும் சாலைகளில் வாகனம் ஓட்டிச் செல்லும் போது அவ்வப்போது வனவிலங்குகள் சாலையை கடப்பதை கணிசமாக பார்த்திருப்போம். அதிலும் காட்டு யானைகள் தான் அதிகம் மனிதர்கள் கண்ணில் சாலையோரம் படக்கூடிய விலங்காக இருக்கும். அந்த வகையில் ஒரு குடும்பத்தினர் தங்களது காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது காட்டு யானை ஒன்று வழியில் வந்து நின்று உள்ளது காரில் இருப்பவர்கள் அச்சமடைந்து காரை பின்னோக்கியும் பயந்து இயக்காமல் அது ஒதுங்கி சென்று விடும் என்ற நம்பிக்கையில் காரை ஓரமாக நிறுத்தி காத்திருந்தனர்.

ஆனால் காரில் உள்ள பெண் ஒருவர் கத்தி கூச்சலிடவே, சத்தமிட்டால் யானை தாக்கி விடும் என மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்துகிறார்கள். பெண் யானை காரை நோக்கி நகர்ந்து வர பயத்தில் அந்தப் பெண் என்ன பேசுவது என்று தெரியாமல் தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறார். இதை பார்த்துவிட்டு மரண பயம் வந்து விட்டால் மரியாதை எல்லாம் மண்ணுக்குள் புதைந்து விடும் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்தபடி இந்த வீடியோ குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நல்வாய்ப்பாக வீடியோ காட்சியில் பதிவு செய்த நபர்களுக்கு எந்த சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.