
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் அனுபவம் கிடையாது என்று கூறினார். இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கு அரசியலில் அனுபவம் கிடையாது என்று கூறியுள்ளார். நான் அரசியலுக்கு வந்தபோதும் இதுபோன்ற விமர்சனங்களை சந்தித்தேன். அதை நான் ஒருபோதும் ஏற்க மறுத்தது கிடையாது.
என்னை விட அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி அனுபவம் வாய்ந்தவர் என்பது உண்மைதான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் திமுக தனக்கு கொடுத்தது பதவி கிடையாது என்றும் கூடுதல் பொறுப்பு தான் என்றும் கூறினார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தபோது எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சராக மாறினார் என்பது தொலைக்காட்சி மூலம் மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பாக முதலில் தான் எப்படி முதல்வராக பொறுப்பேற்றோம் என்பதை எடப்பாடி பழனிச்சாமி நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.