
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிடர் விடுதலைக் கழக கொளத்தூர் மணி, புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் பாஜக புகுத்த நினைக்கின்றது. அதனை தமிழகம் ஏற்க மறுக்கின்றது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருப்பதைப் போல பிரதமர் மோடி மாநிலமான குஜராத்தில் இருப்பதைப் போல கல்வி அமைச்சரே வேந்தர் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
பெரியார் பற்றி சீமான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பேசுவதற்கு முக்கிய காரணம் அதனால் வன்முறை ஏற்பட்டு தாக்குதல் நடந்தால் அதன் மூலம் அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்ற ஆசையில் தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிந்த பின்னர் அந்த அனுதாபம் கிடைக்கலாமே தவிர அதற்கு முன்னால் கிடைக்காது. தேர்தலுக்கு முன்பு அடித்தால் அவை வாக்குகளாக மாறும் என்று சீமான் நினைக்கின்றார்.
ஆனால் அது தேர்தல் முடிந்த பிறகு தான் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தன்னுடைய எஜமானர்களான குருமூர்த்தி மற்றும் கோபால்ஜி ஆகிய இருவரையும் சீமான் சந்திப்பதாக அவருடன் இருந்த ஜெகதீச பாண்டியன் கூறினார். அந்த எஜமானர்களின் கட்டளையை வாலை ஆட்டிக்கொண்டு சீமான் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதுதான் பெரியார் மீதான விமர்சனம் என்று கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.