
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதில் இந்தியா மோதும் போட்டிகள் மற்றும் இலங்கை, துபாயில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஷிப் ட்ராபித்தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருப்பதால் அந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா அங்கு செல்லுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசாங்கம் இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் செல்ல அனுமதிக்காது. இது தொடர்பாக பிசிசிஐ மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி தொடரில் கலந்துகொள்ள வருமாறு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் டெல்லி மற்றும் சண்டிகருக்கு இந்திய அணி திரும்பி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கோரிக்கையை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.