தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொதுக்குழு கூட்டத்தில் பேசியதாவது, பொதுக்குழு வழியாக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தை கொடுக்க உள்ளோம். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கடைப்பிடிப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் அனைத்திலும் மிகவும் கவனம் செலுத்தப்படும். எல்லாருக்கும் அனைத்தும் எளிதில் கிடைக்கும் படி செய்வது தான் நமது நோக்கம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் தொழிலாளர்கள் பக்கம் நாம் துணையாக நிற்போம்.

நம்ம தமிழ்நாடு விவசாய பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த மண். விவசாயத்திற்கும் இயற்கை வளங்களுக்கும் எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதை ஏற்க முடியாது. எங்கள் மக்களை பாதிக்குமாறு எந்த திட்டத்தையும் கொண்டு வராதீர்கள். அதனை உறுதியாக நாங்கள் எதிர்ப்போம். தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை என கூறியுள்ளார்.