விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார்(45) பட்டுக்கோட்டையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா(40). இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம்(17), என்ற மகனும் அபி ஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சதீஷ்குமார் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அசூர் பை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதி சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் படகாயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஸ்ரீராமும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.