தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு பயந்து தான் கரூரில் போட்டியிடாமல் கோவை பக்கம் அண்ணாமலை சென்றதாக கனிமொழி கூறியுள்ளார்.

கரூரில் பேசிய அவர், அண்ணாமலை பொய் மட்டுமே பேசி வருகிறார். எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் செந்தில் பாலாஜி சிறையில் வைக்கப்பட்டுள்ளார், ஜாமீன் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் அவர் வெளியே வந்து விடுவார் என தெரிவித்துள்ளார்.