புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் பணம் சேருவதை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இளைஞர்கள் பலரும் Gpayக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஏனெனில், கையில் எந்த பணமும் இல்லை எனவும் முழுக்க UPI பேமெண்ட்களை சார்ந்துள்ளதால், ரூபாய் நோட்டை மாற்ற வங்கியில் சென்று நிற்க தேவையில்லை என்று கூறுகின்றனர்.