நெல்லை மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனித் திருவிழா 5-ஆம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “இரண்டு வருடங்ககுக்கு பின் மக்களோடு கூட்டமாக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

மேலும் தமிழிசை சவுந்ததராஜன் தனக்கும் புதுச்சேரி முதலமைச்சருக்குமான பிரச்சனை தொடர்பாக பேசினார்.  அதாவது “பாண்டிச்சேரி முதலமைச்சருக்கும் ஆளுநர்க்கும் இடையில்  மோதல் எதுவுமில்லை. எங்கள் இருவருக்குள்ளும் இருப்பதும் அண்ணன்-தங்கை பிரச்சனை தான்” என அவர் கூறினார்.