பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தனது youtube சேனல் மூலம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சச்சின் டெண்டுல்கர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், சச்சின் டெண்டுல்கர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் , நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவரது பேட்டிங்கை பார்த்தோம். எங்கள் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம் எல்லா சமயங்களிலும் சச்சினை அவுட் ஆக்குவதை குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். உணவு இடைவேளையாக இருக்கட்டும் பயிற்சி நேரமாக இருந்தாலும் சரி…. வாசிம் அக்ரம் அவருடைய எண்ணம் “சச்சின் டெண்டுல்கரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும்” என்ற எண்ணம் மட்டுமே இருக்கும் . இது குறித்து எங்களிடம் அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்.

குறிப்பாக இந்திய அணியில் ; சௌரவ் கங்கலி, ராகுல் டிராவிட் ,வீரேந்திர சேவாக் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மன் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் தாக்கத்தை ஏற்படுத்தாத நேரத்தில் அவர்களது சுமையையும் தானே தாங்கிக் கொள்வார். அவர் தனக்கென ஒரு இலக்கை வைத்திருப்பார்.

ஆசாருதீன் இருந்த போதும் நாங்கள் பயப்படவில்லை ; ஆனால் சச்சின் டெண்டுல்கரை பார்த்து பயந்தோம்.
சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆகினாலே நாங்கள் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆகையால் தான் அவர் “மாஸ்டர் பிளாஸ்டர்” என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரு ரன் மிஷின் என பாசித் அலி , சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசியுள்ளார்.,