மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியையடுத்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்க இருக்கிறார்.  நேற்று காலை 9 மணியளவில் படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜையில் குஷ்பூ, மீனா, நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். பூஜைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூவிடம் லேடிஸ் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நயன்தாரா துறந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது. பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எங்கள் காலத்தில் எல்லாம் பட்டம் கொடுத்து பார்த்ததில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி சாருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற யாருக்கும் பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.